000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வாயிற்காவலர் |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a மழு, மறியுடன் அமர்ந்திருக்கும் இளமையான சிவனார் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a விமானத்தின் பஞ்சரக் கோட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆண் உருவம் வாயிற் காவலராய் இருக்கலாம். இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு, சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த சிவனடியாரான வாயிற்காவலர் இடது கையை தொடையில் வைத்தும், வலது கையில் மலரைப் பிடித்தபடியும் உள்ளார். கையில் பிடித்துள்ள மலர் தோளில் விழுந்துள்ளது. சடை மகுடம் தரித்து, கழுத்தில் சரப்பளி என்னும் பெரிய ஆபரணம் விளங்க, காதுகளில் பத்ரகுண்டலமும், மகர குண்டலமும் அணிந்து, கைகளில் கேயூரம், முன்வளை விளங்க, வயிற்றில் உதரபந்தம், மார்பில் முப்புரிநூல் அணி செய்ய, இடையாடை முடிச்சுகள் முன் விழ, அமைதியான தோற்றத்துடன் அமர்ந்துள்ளார். இவர் சிவபெருமானின் வாயிற்காவலர்களாகிய சண்டன், பிரசண்டன் என்ற இருவரில் ஒருவராய் இருக்கலாம். கையில் ஆயுதமின்றி, மிரட்டும் பாணியின்றி இச்சிற்பம் அமைந்திருப்பதால் வாயிற் காவலர் அல்ல என எண்ணுதல் இயலாது. ஏனெனில் இவ்வாறான தோற்றத்தில் துவாரபாலகர்களை அமைப்பதுவும் உண்டு. இவர் எண் திசை காவலர்களில் ஒருவராயும் இருக்கலாம். |
653 | : | _ _ |a வாயிற்காவலர், துவாரபாலகர், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000233 |
barcode | : | TVA_SCL_000233 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |